அமெரிக்காவின் வலுக்கட்டாய தூதாண்மை மற்றும் அதன் பாதிப்பு பற்றிய அறிக்கையை சின்ஹுவாய் செய்தி நிறுவனம் மே 18ஆம் நாள் வெளியிட்டது. உலகளவில் வலுக்கட்டாய தூதாண்மையை அமெரிக்கா மேற்கொண்டு வரும் மோசமான செயல்கள், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி, பிரதேசத்தின் நிலைத்தன்மை மற்றும் உலக அமைதியில் அமெரிக்காவின் இச்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை, இவ்வறிக்கையில் பெருவாரியான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுயநலனுக்காக, அமெரிக்கா அரசியல், பொருளாதாரம், இராணுவம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாய தூதாண்மையை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இச்செயலுக்கு அதன் கூட்டணி நாடுகள் கூட விதிவிலக்கு அல்ல. உலகளவில் கட்டாயப்படுத்தல், தடை விதித்தல், மேலாதிக்கம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் இறுதியில் தனக்குத் தானே தீங்கு ஏற்படும். வலுக்கட்டாய தூதாண்மையைத் திருத்த வேண்டிய அமெரிக்கா, நியாயமான சர்வதேச ஒழுங்கை உலகிற்குத் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.