மூளை செயல்பாடு அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

Estimated read time 0 min read

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக மூளையின் சக்த்தி குறைந்து கொண்டே வரும் .இதை தவிர்க்க சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவும் .

உதாரணமாக தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.இந்த மூளை செயல்பாடு அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

2.மேலும் மூளைக்கு ஆரோக்கியத்தை கொடுக்க பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.

3.இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளைசெல்களை நன்கு செயல்பட வைத்து நம் மூளை செல்களுக்கு உதவுகிறது .

4.அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த பாலால் செய்யப்பட்ட உணவு, நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

5.மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் வளர்ச்சிக்கு முட்டை உதவுகிறது

6.மேலும் இந்த முட்டையை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.

7.மேலும் நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி மூளையை வளப்படுத்தி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

8.மேலும் பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். 9.மேலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

10.மேலும் நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு நல்லது.

Please follow and like us:

You May Also Like

More From Author