ஆசிய நாடுகளில்“வசந்த காலத்திலுள்ள சீனா”பேச்சுவார்த்தை கூட்டம்

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த வசந்த காலத்திலுள்ள சீனா: சீனாவின் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்வு என்ற பேச்சுவார்த்தை கூட்டம் அண்மையில் பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், மங்கோலியா, லாவோஸ், கம்போடியா, மியன்மார் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் இதில் காணொளி மூலம் உரைநிகழ்த்தினார்.

பன்னாட்டு அரசு பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் முதலியோர், இக்கூட்டத்தில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, சீனாவின் உயர் தரப் பொருளாதார வளர்ச்சி, உலகிற்கும் ஆசியாவுக்கும் அளித்த வாய்ப்புகள் ஆகிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

You May Also Like

More From Author