சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுலை 10ஆம் நாள், உஸ்பெகிஸ்தான் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாவ்கட் மிர்சியொயேவுக்கு வாழ்த்து தகவல் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன-உஸ்பெகிஸ்தான் உறவு, பாய்ச்சல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. மிர்சியொயேவுடன் இணைந்து, சீன-உஸ்பெகிஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னெடுத்து, சீன-உஸ்பெகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்ட விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.