OTT வெளியீட்டிற்கு தயாராகும் தனுஷின் ‘ராயன்’  

கடந்த மாதம் வெளியான தனுஷின் ‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது.

இருப்பினும், இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியிடப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் உரிமை பிரைம் வீடியோ மற்றும் சன் பிக்சர்ஸிடம் உள்ளது.

அதனால், பிரைம் ஓடிடி தளத்திலும், சன் நெக்ஸ்ட் தளத்திலும் படம் வெளியாகக்கூடும்.
தனுஷ் எழுதி, இயக்கிய ‘ராயன்’ வெளியாகி 4 வாரங்களை கடந்த பின்னர் OTT யில் வெளியாகக்கூடும்.

அதன்படி மாதத்தின் கடைசி வாரத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

You May Also Like

More From Author