நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 17 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 18 வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 18 ஆவது தவணை பெற இ கேஒய்சி பதிவு செய்ய வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கு http://www.pmkisan.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விவசாயிகள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓடிபி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பி.எம். கிஷான் திட்ட இணையதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து கைவிரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரி பார்க்கலாம்.
பிஎம் கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு இ கேஒய்சி அப்டேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.