சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் ஆகஸ்ட் 30ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு குறித்து சீனாவின் கருத்தை அறிமுகப்படுத்தினார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிகாப்பதும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் செழுமையை விரைவுபடுத்துவதும் சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொது எதிர்பார்ப்பாகும். பஞ்ச சீலக் கோட்பாட்டை இரு தரப்பும் பின்பற்றி, சமத்துவமான ஒழுங்கான உலகப் பலதரப்புவாதத்தையும் அனைவருக்கும் நன்மை பயக்கும் பொருளாதார உலகமயமாக்கத்தையும் உருவாக்க பாடுபட்டு, சர்வதேச ஒழுங்கு மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்றி வருகின்றன என்று லீன் ஜியன் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், சீனாவும் ஆப்பிரிக்காவும், வளரும் நாடுகளின் நியாயமான உரிமை நலன்கள், ஐ.நா சாசனத்தின் குறிக்கோள், பலதரப்புவாதம், சர்வதேச நேர்மை மற்றும் நீதி ஆகியவற்றைப் பேணிகாக்கும் சக்திகளாகும்.
இரு தரப்பும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டை வாய்ப்பாக கொண்டு, வளரும் நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் “உலகின் தென் பகுதி ஆற்றலைத்” திரட்டி, சர்வதேச நேர்மை மற்றும் நீதியைக் கூட்டாக பேணிகாத்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றும் என்று வலியுறுத்தினார்.