அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதி பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி அதாவது இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் 1045 குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலமாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் என தெரிகிறது.