தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வருகின்ற 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இன்று திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, தூத்துக்குடி, குமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கும்பகோணம், திருச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதேபோன்று நாளை அதாவது ஜூன் 22ஆம் தேதி 410 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
இதேபோன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, வேளாங்கண்ணி, ஓசூர், நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு இன்று 55 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மேற்கூறிய இடங்களில் இருந்து நாளை 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு திருவண்ணாமலைக்கு மட்டும் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 30 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரை ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.