அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: காணொலி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..

Estimated read time 1 min read

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,659 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் ரூ. 1916.41 கோடி செலவில் முடிக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்று காலை 10 மணி அளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தவாறு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், சென்னையில் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைன்செயலாளார் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் காலிங்கராயன்பாளையம் நீரேற்று நிலையத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த திட்டமானது காலிங்கராயன்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, உபரி்நீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்வதே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 70 நாட்களுக்கு தினமும் 250 கன அடி வீதம், ஆண்டுக்கு 1.5 டிஎம்சி நீரை மேற்கு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமே இது. இதற்காக காலிங்கராயன்பாளையம், நல்லாகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் இதற்காக ராட்சத நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

6 நீரேற்று நிலையங்கள் வழியாக 1,065 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகள் நிரப்பப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் இந்ததிட்டத்தால் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author