தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் கனமழை கொட்டித்தீத்தது.
இந்நிலையில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னைடை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.