மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் உள்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் விமானங்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, மதுரை விமான நிலையத்திலிருந்து, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பைக்கு விமானங்கள் இயங்குகிறது.
அதேபோல துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்புக்கு பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
முந்தைய நிலைமைப்படி, மதுரை விமான நிலையம் காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது.
ஆனால், 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை நிலவியது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது மதுரை விமான நிலையம்
