இலங்கை-நியூசிலாந்து இடையே ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அறிவிப்பு  

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இரண்டு போட்டிகளும் இலங்கையின் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். முதல் போட்டி செப்டம்பர் 18 அன்று தொடங்குகிறது.

இந்த தொடக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வழக்கமான ஐந்து நாட்கள் நடைமுறையில் இருந்து மாறி ஆறு நாட்கள் நடத்தப்பட உள்ளது.

எனினும், போட்டி ஐந்து நாட்கள் மட்டுமே நடக்கும், இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் இடையே செப்டம்பர் 21 அன்று ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author