இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்: லீட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Estimated read time 1 min read

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. அதனால் இளம் இந்திய அணி பயமின்றி விளையாடி 2007க்குப்பின் இங்கிலாந்தில் வெற்றி காண போராட உள்ளது.

அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் இருக்கும் ஹெண்டிங்லே மைதானத்தில் துவங்குகிறது. 1890ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 17000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே 1899 முதல் நூற்றாண்டுகள் கடந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

லீட்ஸ் மைதானம்:

வரலாற்றில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மொத்தம் 136 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 51 போட்டிகளிலும் இங்கிலாந்து 35 போட்டிகளிலும் வென்றுள்ள. 50 போட்டிகள் டிராவில் முடிந்தன. அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

அதில் இங்கிலாந்து 36 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா வெறும் 9 வெற்றிகளைப் பெற்ற நிலையை 22 போட்டிகள் டிராவில் முடிந்தன. இவ்விரு அணிகளும் லீட்ஸ் மைதானத்தில் 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 4, இந்தியா 2 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் 1 போட்டி டிராவில் முடிந்தது.

வெதர் ரிப்போர்ட்:

லீட்ஸ் நகரில் போட்டி நடைபெறும் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்று பிபிசி வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக 2, 3, 5வது நாட்களில் 10 – 20% லேசான தூரல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதுவே இங்கிலாந்தின் இயற்கையான வானிலை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

ஹண்டிங்லே பிட்ச் வழக்கம் போல ஆரம்பக்கட்ட நாட்களில் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருக்கும் என்று அதனுடைய தயாரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் கூறியுள்ளார். இதற்கிடையே வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் கண்டிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து பெரிய சவாலைக் கொடுப்பார்கள். எனவே அதை சமாளித்து நங்கூரமாக விளையாடினால் மட்டுமே பேட்ஸ்மேன்களால் பெரிய ரன்கள் குவிக்க முடியும்.

நாட்கள் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாகி ஸ்பின்னர்களுக்கு கை கொடுக்கத் துவங்கும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற 89 போட்டிகளில் 29 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. ஆனால் வரலாற்றின் வெற்றிகரமான சாதனை சேசிங் (404/3) உட்பட இங்கே 36 முறை 2வதாக பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பௌலிங் செய்து எதிரணியை விரைவாக சுருட்டுவது வெற்றிக்கு வித்திடலாம்.

The post இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்: லீட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் appeared first on Cric Tamil.

Please follow and like us:

You May Also Like

More From Author