அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது.

காதலரான ஆசிக், பிரச்னை காரணமாக பவுசியாவை கொலை செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். சக தோழிகள் இதனை பார்த்து விடுதிக்கு வந்து பார்த்தபோது இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசில் அளித்த புகாரின் பேரில், ஆஷிக்கை போலீசார் கைது செய்தனர்.

More From Author