பாரிஸ் ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழு ஜூலை 13ஆம் நாள் பெய்ஜிங்கில் அமைக்கப்பட்டது.
இப்பிரதிநிதிக்குழுவில் 716 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 405 விளையாட்டு வீரர்கள் ஆவர்.
405 விளையாட்டு வீரர்களில் 136 ஆண்களும் 269 பெண்களும் உள்ளனர். விளையாட்டு வீரர்களின் சராசரி வயது 25 ஆகும் என்று சீன தேசிய விளையாட்டு தலைமை பணியகத்தின் துணை தலைவர் சோ ஜின்சியாங் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 32 போட்டிகளைச் சேர்ந்த 329 கிளை போட்டிகள் இருக்கும். சீன விளையாட்டுப் பிரதிநிதிக்குழுவினர் 30 போட்டிகளைச் சேர்ந்த 236 கிளைப் போட்டிகளில் கலந்து கொள்வர் என தெரிய வருகிறது.