சீனாவின் எரியாற்றல் மாற்றத்தால் பெறப்பட்டுள்ள சாதனைகள்

சீனாவின் எரியாற்றல் மாற்றம் என்ற வெள்ளை அறிக்கையை அறிமுகப்படுத்தும் வகையில், சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்ட் 29ஆம் நாள் காலை 10 மணிக்கு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

“சீனாவின் எரியாற்றல் மாற்றம்” என்ற வெள்ளை அறிக்கை ஐந்து அம்சங்களை விளக்கிக் கூறுவதாகச் சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் துணைத் தலைவர் வான் ஜின்சோங் கூறினார்.

முதலாவதாக சீனாவின் எரியாற்றல் மாற்றம், தூய்மையான எரியாற்றல் வளர்ச்சியை விரைவான பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இரண்டாவதாக சீனாவின் எரியாற்றல் மாற்றம் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சியை ஆதரிக்கிறது. மூன்றாவதாக, சீன எரியாற்றல் மாற்றம், மக்களின் அருமையான வாழ்க்கைத் தேவைக்கு  உத்தரவாதம் அளிக்கிறது.

நான்காவதாக, சீன எரியாற்றல் மாற்றம், உயிரினச் சுற்றுச்சூழலினை உயர் நிலை பாதுகாப்புடன் இணைந்து முன்னேறுகின்றது. கடைசியாக, சீன எரியாற்றல் மாற்றம், உலக எரியாற்றல் மாற்றத்துக்கும் தூய்மையான அழகான உலகத்தைக் கூட்டாக கட்டியமைப்பதற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author