தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் படியும், இன்று சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வைத்து மெகா லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது..
அதில் சங்கரன்கோவில் சார்பு நீதிபதி திரு. மகேந்திரவர்மா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி. அலிமா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி.பவித்ரா, மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் திரு. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகளை சமரசத் தீர்வு மூலம் விரைந்து முடித்தனர்…
இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 684 வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூபாய் 37,11,100/- மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்பட்டுள்ளது
