முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு எதிர்பாராத வீரரை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாடிய நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை ஏலத்தில் எடுக்கச் சிஎஸ்கே நிர்வாகத்தைக் அவர் கோரியுள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறும் ஏலத்திற்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்குப் பிறகு இரண்டாவது பெரிய தொகையான ₹43.40 கோடி பணத்துடன் நுழைகிறது.
ஐபிஎல் 2026 ஏலம்: முன்னாள் ஆர்சிபி வீரரை எடுக்க சிஎஸ்கேவுக்கு ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்
