ஈவெரா, அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அப்பெயரை வைத்தவர் பாரதியார் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் அமைப்பின் சார்பில் “பாரதி கண்ட வந்தே மாதரம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி பிறந்த தினத்தையும், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையும் முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வையாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். அப்போது பேசிய சீமான், பாரதி நிராகரிக்கப்படும் இடத்தில் தமிழும் நிராகரிக்கப்படுகிறது என்று பொருள் என கூறினார்.
