புதுச்சேரியில் புதிதாக ஓர் அரசியல் கட்சி தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் வெளியிட்டார். ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்தக் கட்சியின் தொடக்க விழா, நாளை (டிசம்பர் 14) பாண்டி மெரினா கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
கட்சியைத் தொடங்கியவுடன், நடிகர் விஜய் அவர்களின் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்தக் கட்சி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
