மக்களுக்கு உதவ அனைவரும் களத்துக்கு வாங்க…. முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு….!!!

மழை பாதிப்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த முதல்வரின் X தள பதிவில், “கனமழை முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன்.

மக்களின் சிரமம் தவிர்க்க அரசுத் துறைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More From Author