பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடுகு- தாளிக்க
வெந்தயம்- தாளிக்க
பூண்டு- 10
புளி- ஒரு எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய்- 25 (விதை நீக்கியது)
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சாம்பார் வெங்காயம்- 20
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
வெல்லம்- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு தணிந்த பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டி தேவையான அளவு உப்பு, வெல்லம் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது, அதில் கடுகு கறிவேப்பிலை பூண்டு பற்கள் போட்டு தாளித்து இறக்கி பரிமாறவும்.

You May Also Like

More From Author