பண்டிகை காலத்தில், இந்தியர்கள் ரூ.72,000 கோடி மதிப்பில் தங்கம் வாங்கினர்

Estimated read time 0 min read

இந்தியா புல்லியன், ஜுவல்லர்ஸ் சங்கம் தெரிவித்ததாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.8 லட்சம் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தது. பின்னர், அதில் சுமார் 21 சதவீதம் விலை குறைந்து, 10 கிராம் ரூ.1.42 லட்சம் என்ற அளவிற்கு இறங்கியது. தங்கம் விலை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தாலும், ஜனவரி உச்ச விலையுடன் ஒப்பிடுகையில் குறைந்திருந்ததால், காத்திருந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் நகைக் கடைகளுக்குப் படையெடுத்தனர்.

நவம்பர் 8ல் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், நவம்பர் 20ம் தேதி முதல் திருமண சீசன் துவங்க உள்ளது. பண்டிகை, திருமண தேவைகள் ஒரே நேரத்தில் இணைந்ததால் நகை விற்பனை சூடுபிடித்தது.

இருப்பினும், அதிக விலை காரணமாக, 12 கிராம் நெக்லஸ் செட்கள், 18 காரட் பிரேஸ்லெட்டுகள், தங்க நாணயங்கள் மற்றும் பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்குவதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். தங்கத்தின் மீது மக்களுக்கு மீண்டும் ஆர்வம் வந்து நகைகடைக்கு படையெடுப்பதால், நகைக் கடைகள் உற்சாகம் அடைந்துள்ளன.

நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தீபாவளி, தந்தேராஸ் பண்டிகை காலத்தில், இந்தியர்கள் ரூ.72,000 கோடி மதிப்பிலான 52 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர்

Please follow and like us:

You May Also Like

More From Author