தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை- முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது. திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

You May Also Like

More From Author