தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் நேற்று சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றார்.
இந்நிலையில் சன் பிரான்சிஸ்கோ நகரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
குறிப்பாக சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை அமெரிக்காவைச் சேர்ந்த applied materials நிறுவனம் அமைக்க இருக்கிறது.
இது செயற்கை நுண்ணறிவு அதாவது ஏஐ தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன மையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை செம்மஞ்சேரியில் 250 கோடி மதிப்பீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க microchip நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அதன் பிறகு கோவையில் 150 கோடி மதிப்பீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழிற்சாலையை அமைக்க yield engineering system நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனையடுத்து சென்னை அடுத்த சிறுசேரியில் 450 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்க nokia மற்றும் Paypal நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில் PayPal நிறுவன ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு நோக்கியா நிறுவனத்தின் மூலம் 100 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் ஓமியம் நிறுவனத்துடன் 400 கோடி முதலீட்டில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Geakmiinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும், புதிய அமெரிக்க நிறுவனங்கள் தொழில் செய்ய தமிழகத்திற்கு வர வேண்டும் எனவும் கூறினார்.