சீரான வளர்ச்சியடைந்து வருகின்ற சீனச் சேவை வர்த்தகம்

சிக்கலான வெளிப்புற நிலைமையில், சீனச் சேவை வர்த்தகம் சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் சேவை வர்த்தக வளர்ச்சி கருத்தரங்கில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டு சீனச் சேவை வர்த்தக வளர்ச்சி அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 93 ஆயிரத்து 312 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்திருந்தது.
மேலும், சீனச் சேவை வர்த்தகத்தின் அளவு உயர்த்தப்பட்டு, கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பிரதேச வளர்ச்சி இசைவாக முன்னேற்றப்பட்டு, சர்வதேச ஒத்துழைப்பு மேலும் ஆழமாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக சீனச் சேவை வர்த்தகம் மாறியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில், சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காடு அதிகமாகும் என்று வணிக அமைச்சரின் துணையாளர் தாங் வென்ஹோங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author