திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் உடனடியாக மத்திய அரசின் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிப்பது குறித்து மத்திய – மாநில காவல்துறை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் நீண்ட விசாரணைக்கு பிறகு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.