பிரேசில் அரசுத் தலைவர் லூலாவுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

பிரேசில் அரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுடன் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 13ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-பிரேசில் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை இரு நாடுகளும் ஆழமாக முன்னேற்றி, இரு நாடுகளின் நெடுநோக்கு திட்டங்களின் இணைப்பை ஆழமாக்கி, உலகளாவிய தெற்கு நாடுகள் இடையேயான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

லூலா கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்க பிரேசில் விரும்புவதாக தெரிவித்தார். பொருளாதார மற்றும் வர்த்தகம், உள்கட்டமைப்பு, விண்வெளி, நாணயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், பண்பாட்டு மற்றும் மக்கள் தொடர்புக்கான பரிமாற்றத்தை அதிகரிக்கவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author