குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது.
குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 1.59 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இதன் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்த 50 நாட்களில் முடிவை வெளியிட்டுள்ளது தேர்வர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடுத்து முதன்மை தேர்வுகள் டிசம்பர் 10-13 வரை சென்னையில் நடைபெறும் என அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, செப்டம்பர் 6 முதல் 15ஆம் தேதி வரை, இதற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக் கட்டணத்தை டிஎன்பிஎஸ்சி தளத்தில் செலுத்துமாறு அறிவித்துள்ளது.