பிரிட்டன் தலைமையமைச்சர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரின் சந்திப்பு

பிப்ரவரி 13ஆம் நாள் பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மர் இலண்டனில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், பிரிட்டனுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், பொருளாதார மற்றும் வர்த்தக முதலீடு, தூய்மையான எரியாற்றல் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகின்றது என்றார்.


ஸ்டார்மர் கூறுகையில் தற்போது பிரிட்டனும் சீனாவும் பல்வேறு துறைகளின் இரு நாட்டு ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பயணத்தின் போது, தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பிரிட்டன் தலைமையமைச்சரின் ஆலோசகர் ஜொனாதன் பௌவியரை வாங்யீ சந்தித்தார். அதோடு, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியுடன் 10ஆவது சீன-பிரிட்டன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையையும் வாங்யீ மேற்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author