சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 18ஆம் நாள், புதுதில்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகிய இருவரும், காசானில் வெற்றிகரமாக சந்திப்பு நடத்தினர். இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளை இரு தரப்பும் உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சீன-இந்திய உறவு ஒத்துழைப்புப் பாதைக்குத் திரும்பிய பின் அதன் முன்னேற்றப் போக்கு மிகவும் ஆக்கப்பூர்வமானது. இவ்வாண்டு, இரு தரப்புகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும்.
ஒன்றை ஒன்று கூட்டாளியாகவும் வளர்ச்சி வாய்ப்பாகவும் இரு தரப்பும் கருதி தத்தமது அரிய மூலவளங்களை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். பெரிய அண்டை நாடுகளிடையில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, அமைதியான சக வாழ்வு, கூட்டு வளர்ச்சி, கூட்டு பயன் தரும் சரியான பழக்கமுறையை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
ஜெய்சங்கர் கூறுகையில்,
இரு தரப்புகளின் பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு இயல்பாக மாறியுள்ளன. சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள கா ரன்போச்சே மற்றும் மபாம் ஏரிக்கு இந்திய நாட்டவர் புனித பயணம் மேற்கொள்வதற்கு சீனா வழங்கியுள்ள வசதிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியன்ச்சின் உச்சிமாநாட்டை சீனா நடத்துவதற்கு இந்தியா மாபெரும் ஆதரவளிக்கிறது. பிரிக்ஸ் உள்ளிட்ட பல தரப்பு அமைப்புமுறையில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக என்றார்.
பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.