மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் தனது காரில் ரேஸ் கோர்ஸ் மைதானம் வழியாக புது நத்தம் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
எஸ்.பி பங்களா அருகே சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து மளமளவென புகை வெளியேறியது. பதறி போய் காரை ஓரத்தில் நிறுத்தினார்.
அதற்குள் புகை தீயாக மாறி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைய டுத்து கோபி கண்ணன் வெளியே குதித்து தப்பி னார். அதற்குள் கார் வேக மாக தீப்பிடித்து எரிந்தது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங் கடேசன் தலைமையில் ஏட்டு காதர் பாட்சா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.