சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வந்த சியரா லியோன் அரசுத் தலைவர் ஜூலியஸ் மாட வோனி பியோவை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 4ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இரு தரப்பின் கூட்டு முயற்சியில், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கும், சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதற்கும் நடப்பு உச்சிமாநாடு புதிய பங்காற்றுமென நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், சியரா லியோனுடன் ஆட்சிமுறை அனுபவங்களின் பரிமாற்றத்தை மேற்கொண்டு வளர்ச்சி நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி வேளாண்மை, அடிப்படை வசதி, எரியாற்றல் மற்றும் வளம் முதலிய துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு பெய்ஜிங் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என எதிர்பார்ப்பதாக பியோ கூறினார். ஒரே சீனா எனும் கொள்கையில் சியரா லியோன் உறுதியாக ஊன்றி நின்று சீனாவுடன் நம்பகமான நண்பர் என்ற உறவை வளர்க்க விரும்புவதாகவும் பியோ கூறினார்.