சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார்.
வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் லண்டனில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பாரிசில் இசைக்கச்சேரி நடத்தினார்.
இந்த இசை கச்சேரிக்கு அவர் ட்ரைனில் பயணித்த வீடியோ ஒன்றை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பகிர்ந்து கொண்டார்.
அதில் கோட் சூட் போட்டுகொண்டு, வித்தியாசமான கெட்அப்பில் இருந்தார்.
கூடவே பின்னணியில் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடலும் முத்தாய்ப்பாக ஒலிக்க, இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
இளையராஜா தற்போது அவரது பயோபிக் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதில் தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது