சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 12ஆம் நாள் ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டத்தின் 60வது ஆண்டு நிறைவுக்கான துவக்க விழாவில் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டம் நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், கூட்டுச் செழுமையின் நோக்கத்தை நிலைநிறுத்துவது, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்துவது, வடக்கு-தெற்கு உரையாடலை ஆதரிப்பது, புதிய சர்வதேசப் பொருளாதார ஒழுங்கை உருவாக்குவதை முன்னேற்றுவது ஆகியவை உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. அமைதி வளர்ச்சிக்கான சர்வதேசச் சூழலை உருவாக்கவும், திறந்த வளர்ச்சியின் காலத்தின் ஓட்டத்தைப் பின்பற்றவும், புத்தாக்க வளர்ச்சியின் வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்றார்.
இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். உயர் தர வளர்ச்சியுடன் சீனாவின் நவீனமயமாக்கத்தைச் சீனா பன்முகங்களிலும் முன்னேற்றி, உலக வளர்ச்சிக்குப் புதிய மேலதிக வாய்ப்புகளைக் கொண்டுவருவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.