மதுரை மக்களுக்கு வெளியான நற்செய்தி; கப்பலூர் டோல் கேட்டில் சுங்க கட்டணத்தில் மாற்றம்  

மதுரை மக்கள் நீண்ட நாட்களாக கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற கோரிக்கை வைத்து வந்தனர்.
சென்ற மாதம் இதற்காக கடையடைப்பும், MP வெங்கடேசன் தலைமையில் போராட்டமும் நடந்தது நினைவிருக்கலாம்.
இந்த கோரிக்கை சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மூர்த்தி.
அதன்படி உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. அவர்கள் ஆதார் அட்டையை காட்டி செல்லலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
திருமங்கலம்-மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த கப்பலூர் டோல் கேட்டை எடுக்க வேண்டுமெனவும், இதனால் கப்பலூர் தொழிற்பேட்டை மற்றும் திருமங்கலத்தில் பணிக்கு செல்வோருக்கு இது சிரமாக இருக்கிறது எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author