மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழனன்று (செப்டம்பர் 5), இந்தியாவின் மின்சார வாகன சந்தைக்கு இனி அரசாங்க மானியங்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் தேவை மற்றும் இத்துறையில் செலவுகள் குறைவதை மேற்கோள் காட்டி அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் செலவுகள் அதிகமாக இருந்தது என்பதால் மானியம் அவசியமாக இருந்ததாகக் கூறிய நிதின் கட்கரி, தற்போது மாநிலத்திற்கு தேவையில்லாத சூழ உருவாகியுள்ளதாக விளக்கினார்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்கனவே சாதகமான வரி விதிப்பால் பயனடைகின்றன என்றும், அவற்றின் மீதான ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட குறிப்பிடத்தக்க நன்மையை வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.