4 ஆண்டு பதவி காலத்தில் 532 நாட்கள்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!! 

Estimated read time 1 min read

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குடியரசு கட்சியின் RNC ஆய்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்கு ஆண்டு பதவி காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது அவரது பதவி காலத்தில் 40 சதவீதம் ஆகும்.

சராசரியாக ஒரு அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை ஜோ பைடன் நான்கு ஆண்டுகளில் எடுத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அரசு ஊழியர் 10 முதல் 14 நாட்கள் மட்டும்தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற முடியும்.

கடந்த ஆண்டு குடியரசு கட்சியினர் ஜோ பைடனுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author