2025ஆம் ஆண்டில் சீன ஜின்தௌ நகரின் சுங்கத் துறையின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாதிரி மண்டலத்திற்கு 1225 சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிகள் சென்று வந்தன. இதன் மூலம், ஏற்றிச்செல்லப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் எடை 8லட்சத்து 40ஆயிரம் டன்னை எட்டியுள்ளது. சேவையளித்த தொடர்வண்டிகளின் எண்ணிக்கையும் சரக்கு எடையும் 20விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து வரலாற்று காணாத அளவில் புதிய பதிவை எட்டின.
இம்மாதிரி மண்டலம் சேவை தொடங்கிய பின்னர், 5491 சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டிகள் சென்று வந்தன. 4லட்சத்து 50ஆயிரமான கொல்கலன்களும் 38லட்சம் டன் எடையுள்ள ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.
