புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்  

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் தீவினை நிலத்தோடு இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
மிகவும் பிரபலமான இந்த பாலம், இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.
எனினும் கடல் மண் அரிப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, பழைய பாலம் வலு இழந்து தொடர்ந்து சேதம் அடைந்து வந்தது.
இதனால், ரயில் சேவை தொடர முடியவில்லை.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கீழ் உள்ள மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய ரயில் பாலம் கட்டும் திட்டத்தை 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

You May Also Like

More From Author