பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி  

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, இன்று, வியாழக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
79 வயதான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர், உடல்நலக்குறைவால் அதிகாலை 1:40 மணியளவில் Evercare மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார் என்று BNP ஊடக செல் உறுப்பினர் சைருல் கபீர் கான் கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
அவரது மருத்துவர், பேராசிரியர் ஏஇசட்எம் ஜாஹித் ஹொசைன், மருத்துவ வாரியம் பல பரிசோதனைகளை பரிந்துரைத்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் ஒரு தனியார் அறையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

You May Also Like

More From Author