ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்  

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இது நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டாலும், மக்கள் அந்த பேருந்து நிலையத்தை எளிதாக அணுக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும், ரயிலில் செல்லும் பயணிகள் ஊரப்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதற்காக கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசுடன் இணைந்து தெற்கு ரயில்வே நீண்ட தூரம் தெற்கு செல்லும் பேருந்துகளில் ஏறும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் நிறுத்த ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது.

You May Also Like

More From Author