சியேரா லியோன் அரசுத் தலைவர் லியோ சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

 

சியேரா லியோன் அரசுத் தலைவர் லியோ அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு சியேரா லியோன்-சீன தூதாண்மையுறவு நிறவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும். சீனா நம்பத்தக்க கூட்டாளியாகும். இரு நாட்டுறவுக்கு உறுதியான அடித்தளமும் வலுவான வளரச்சிப் போக்கும் உண்டு. ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது அதற்கான மைய ஆதார தூணாகும் என்றார்.

மேலும், தூதாண்மையுறவு கொண்ட ஆப்பிரிக்காவின் 53 நாடுகளின் மீது சீனா சுங்க வரி விலக்குக் கொள்கையை மேற்கொண்டுள்ளது. உலக வளர்ச்சிக்குச் சீனா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கி வருகிறது. சொந்த நாட்டின் வளர்ச்சியை நனவாக்குவதோடு, சீனா நட்பு நாடுகளையும் கொண்டு கூட்டாக முன்னெறி வருகிறது. உலகம் மேலும் அமைதியாக மாறுவதற்கு இது உதவியளிக்கும் என்று அவர் கூறினார்.

பலதரப்புவாதம் எந்த வடிவிலான அறைக்கூவலை எதிர்கொண்டாலும், தற்போதைய உலகம் எப்போதும் பலதரப்புவாத கட்டுகோப்பைச் சுற்றி இயங்கும் என்று சர்வதேச நிலைமையைக் குறித்து அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author