தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலரில் வெளியான செய்தியின்படி, இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு அரசின் பதவிக்காலம் முடியும் ஆண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட மாட்டாது. தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டையே அரசு தாக்கல் செய்யும்.
தற்போது தமிழக அரசு பிப்ரவரி தொடக்கத்திலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பது, தேர்தல் ஆணையம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகிறது.
தேர்தல் 2026:பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
