2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் உலகச் சேவை வர்த்தக உச்சிமாநாட்டில் சீனாவின் முன்மொழிவுகள்

Estimated read time 0 min read

2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் உலகச் சேவை வர்த்தக உச்சிமாநாடு செப்டம்பர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பெய்ஜிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளருமான யிங்லீ, இந்த உச்சிமாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதத்தை வாசித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவேஷியாங் இந்த உச்சிமாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.


டிங் சுவேஷியாங் கூறுகையில், புதிய யுகத்தில், உயர்நிலை திறப்புப் பணியைச் சீனா பெரிதும் முன்னேற்றி, சேவை துறை மற்றும் சேவை வர்த்தகத்துக்கான திறப்புப் பணியின் புத்தாக்க வளர்ச்சியை விரைவுபடுத்தி, பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.


மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, சேவை துறை மற்றும் சேவை வர்த்தக ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆழமாக்கி, உயர்நிலை திறப்புப்பணியின் மூலம், சேவை வர்த்தகத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்தின் செழிப்பான வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது.

திறப்பான வளர்ச்சியின் புதிய வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது, புத்தாக்க வளர்ச்சியின் புதிய இயக்காற்றலைக் கூட்டாக வளர்ப்பது, பெரிய சந்தைகளின் அளவைக் கூட்டாக விரிவுபடுத்துவது, ஒத்துழைப்பு வளர்ச்சியின் புதிய சூழ்நிலையைக் கூட்டாக உருவாக்குவது ஆகியவை, சீனாவின் 4 முன்மொழிவுகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author