சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி 2025ஆம் ஆண்டில் விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியையும் மனிதரை ஏற்றிச்செல்லும் சந்திர ஆய்வு ஆகிய இரண்டு முக்கிய பணிகளை முன்னேற்றவுள்ளது.
மனிதரை ஏற்றிச்செல்லும் சென்செள 20 மற்றும் சென்சௌ 21 விண்கலங்களைச் சீனா இவ்வாண்டில் செலுத்தும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் குழு ஏற்கனவே தொடர்புடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், அனைத்து மனிதகுலத்துக்கும் சீனாவின் வளர்ச்சிச் சாதனைகளைப் பலனளிக்கச் செய்ய, சீனா, விண்வெளி நிலையத்தின் ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் திறந்துள்ளது. மனிதகுலத்தின் எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதற்கும் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.