தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா..!  

Estimated read time 1 min read

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின் கீழ், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்கும் கோப்பிற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் கேரள அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் இந்த இலவச பயணத் திட்டம் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில பெண் பயணிகள்மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதால் தங்களின் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பலத்த கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் நஷ்டத்தில் இயங்கி வரும் சூழலில், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும் அரசுப் பேருந்துகளை நோக்கிச் சென்றால் தங்களின் தினசரி வருவாய் முற்றிலும் முடங்கிவிடும் என அவர்கள் அச்சப்படுகின்றனர்.

ஏற்கனவே கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்ட ‘சக்தி’ திட்டத்தால் அங்குள்ள தனியார் பேருந்து தொழில் நலிவடைந்ததைச் சுட்டிக்காட்டும் உரிமையாளர்கள்,தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வழித்தட அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பான கோரிக்கை மனுவை அளிக்க முதலமைச்சர் வி.டி.சதீசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author