நிலைப்புடன் அதிகரித்துள்ள சீனக் கப்பல் தயாரிப்புத் தொழில்

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனக் கப்பல் தயாரிப்பில் நிறைவு எண்ணிக்கையும், புதிய பதிவு எண்ணிக்கையும், கையிலுள்ள பதிவுகளின் எண்ணிக்கையும் நிலைப்புடன் அதிகரித்துள்ளன. இம்மூன்று குறிப்பீடுகள் உலகச் சந்தையில் முறையே 55.1விழுக்காடு, 74.7விழுக்காடு மற்றும் 61.4விழுக்காட்டை வகிக்கின்றன. உலகின் 18 முக்கியக் கப்பல் வகைகளில், 14 கப்பல் வகைகளுக்கான புதிய பதிவு எண்ணிக்கையில் சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளதாக சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 10ஆம் நாள் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய சீனத் தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 7.1விழுக்காடு அதிகரித்துள்ளது. 31 முக்கியத் தயாரிப்புத் தொழில்களில் 19 தொழில்களின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் மொத்த லாபத் தொகை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author