தேசிய மக்கள் பேரவையின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

சீனாவில் தேசிய மக்கள் பேரவை நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டம் 14ஆம் நாள் சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

அதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்று உரை நிகழ்த்தினார். நாட்டின் அடிப்படை அரசியல் அமைப்பான மக்கள் பேரவை என்ற அமைப்பை நிலைநிறுத்தவும், மேம்படுத்தவும் செயல்படுத்தவும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிய யுகத்தில் கட்சி மற்றும் மக்களின் இலக்குகளை நனவாக்குவதற்கு அமைப்புமுறை ரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் கூட்டத்தில் வலியுறுத்தினார்.


மேலும், பாதை, கோட்பாடு, அமைப்புமுறை மற்றும் பண்பாடு ஆகியவற்றில் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தி, முழு செயல்முறை மக்கள் ஜனநாயகத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author